கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற மானாமதுரையைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு நகர் மன்ற தலைவர் வாழ்த்து. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 July 2024

கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற மானாமதுரையைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு நகர் மன்ற தலைவர் வாழ்த்து.

 


கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற மானாமதுரையைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு நகர் மன்ற தலைவர் வாழ்த்து. 


தமிழ்நாடு விளையாட்டு கராத்தே சங்கம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான சப்-ஜூனியர் தமிழ்நாடு சாம்பியன் போட்டி சென்னை துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் ஜூலை 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டிலில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நாகர்ஜுன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்றார்கள்.


இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி ர. லலினா, வெண்கலப்பதக்கம் வென்ற மாணவன் மு. திக்க்ஷன், வெண்கலப்பதக்கம் பதக்கம் வென்ற மாணவன் து. ஜெகத் அர்சிக் மற்றும் ஆறுதல் பரிசு பெற்ற மாணவன் மு. ஸ்ரீபிரணவ் ஆகியோர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மானாமதுரை நகர் மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி அவர்களிடம் நேரில் வாழ்த்து பெற்றனர். 


இந்நிகழ்வில் நாகர்ஜுன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி நிறுவனர் முனைவர் மற்றும் பயிற்சியாளர் சிவ. நாகர்ஜுன், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad