மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியின் சார்பாக தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
படைத்தவன் கடவுள், ஆனால் காக்கும் கடவுள் உருவத்தில் இருக்கும் மருத்துவர்களே! என்ற முழக்கத்தை முன்னெடுத்து, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் தேசிய மருத்துவர்கள் தினத்தை கொண்டாடும் விதமாக பள்ளியின் சார்பாக பள்ளி மாணவர்கள் மானாமதுரை அரசு மருத்துவமனையில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி கொண்டாடினர். மானாமதுரை மருத்துவ சங்கத்தலைவர் திரு செல்வராஜ் மற்றும் மருத்துவர்களான திரு முத்துராமலிங்கம், திருமதி ரேவதி, திரு ஜெகன், திரு கண்ணண் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பள்ளியின் சார்பாக மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவர்கள் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் கவிதை வாசித்தனர். மருத்துவ தினத்தை முன்னிட்டு பெற்றோர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment