மானாமதுரையில் இயங்கி வரும் செர்டு நிறுவனத்தின் திருவள்ளுவர் இளைஞர் சுய உதவிக் குழுவின் 22 ஆம் ஆண்டு தொடக்க விழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் செர்டு நிறுவனத்தின் திருவள்ளுவர் இளைஞர் சுய உதவிக் குழுவின் 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி சாதனங்கள் வழங்கும் விழா மற்றும் 10 & 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா மானாமதுரை குலாலர் தெருவில் உள்ள மண்பாண்ட தொழிலாளர் கூட்ட அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 5 மணி அளவில் தலைவர் க. தேவதாஸ் அவர்களின் தலைமையில், செயலாளர் செ. நாகலிங்கம் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் உதவி செயலாளர் ஆ. அடைக்கலம் வரவேற்புரை ஆற்றினார். மேலும் இவ்விழாவில் கௌ. சுந்தரராஜன், சிற்பகலா ரத்ன ஆ. சண்முகம், செர்டு நிறுவன இயக்குனர் டாக்டர் எல். பாண்டி, பன்னிரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் எஸ். நதியா செல்வம் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர். மானாமதுரை உதவி தலைவர் ஞா. சங்கர் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், சேர்ந்து நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment