காரைக்குடியில் புதுப்பிக்கப்பட்ட Unimoni கிளை திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்தியாவில் அந்நியச் செலவாணி மற்றும் பணப்பரிமாற்ற சேவை வழங்கும் நிறுவனம் Unimoni ஆகும்.இது தனது புதிய கிளையை காரைக்குடி பெரியார் சிலை அருகில் திறந்துள்ளது. இந்த திறப்பு விழாவில் தமிழ்நாடு தெற்கு பிராந்திய தலைவர் எஸ் கார்த்திகேயன், மதுரை மண்டலத் தலைவர் காளீஸ்வரன், கிளை மேலாளர் ஹரி பிரகாஷ் ஆகியோரின் முன்னிலையில் தலைமை மக்கள் அதிகாரி ஆர்.ரத்தீஷ், தேசிய வணிகத் தலைவர் - தங்கக் கடன் கே. டைட்டஸ் ஆகியோர் கிளையை தொடங்கி வைத்தனர்.
திறப்பு விழா முடிந்த பிறகு சிஎஸ்ஆர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கோட்டையூர் அன்னபூரணி முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு ஆடை பொருட்கள், மருந்துகள், மல்லிகை பொருட்களும் வழங்கப்பட்டன. மேலும் காரைக்குடி நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டை முன்னிட்டு பள்ளிப் பைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் Unimoni நிர்வாகிகளும், ஊழியர்களும் மற்றும் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment