இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் வல்லக்குளம் கிராமத்தில் 'மக்கள் தொடர்பு முகாம்' நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் வல்லக்குளம் கிராமத்தில் 'மக்கள் தொடர்பு முகாம்' நடைபெற்றது. இதில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து மனுக்களாக பெற்றுக் கொண்டதோடு, தையல் இயந்திரம், மரக்கன்றுகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் இணைந்து வழங்கினர். அதனைத் தொடர்ந்து மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் பொட்டப்பாலையம் ஊராட்சி கரிசல்குளம் கிராமத்தில் சமுதாய கூடத்தினையும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்து, ஊர் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் சேங்கைமாறன், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன், இளையான்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தமிழ்மாறன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி குழந்தி பிச்சை, ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment