அழகப்பா அரசுக் கலைக்கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24 (திங்கட்கிழமை)அன்று அனைத்து அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 27 வியாழக்கிழமை அன்று பி.காம்(வணிகவியல்), பி.பி.ஏ(தொழில் நிர்வாகவியல்), பி.ஏ வரலாறு, பொருளியல் மற்றும் பி.ஏ தமிழ், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடங்களுக்கு நடைபெற உள்ளதாக முதல்வர் பெத்தாலெட்சுமி அறிவிப்பு.
இக் கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ மாணவிகள் பெற்றோருடன் தங்களின் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், மற்றும் சான்றிதழ்களின் அசல் மற்றும் இரண்டு நகல்கள், நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும், கல்லூரிக்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவத்தின் அனைத்து பக்கங்களையும் உள்ளடக்கிய நகல்கள் இரண்டும் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment