சிவகங்கை பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 June 2024

சிவகங்கை பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்.


 சிவகங்கை பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொண்ட  பாராளுமன்ற உறுப்பினர்.


சிவகங்கை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு திரு கார்த்திக் ப. சிதம்பரம் அவர்கள் பாராளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து தனது முதல் பணியாக சிவகங்கை மற்றும் பொன்னமராவதி பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று அறிவுறுத்தி இருந்த நிலையில், முதற்கட்டமாக மே 12ஆம் தேதி புதன்கிழமையன்று மாண்புமிகு ‌சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி சிதம்பரம் மற்றும் மாண்புமிகு முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ப. சிதம்பரம்‌ ஆகியோர் சிவகங்கை பேருந்து நிலையத்தை  ஆய்வு மேற்கொண்டனர். 


இதில் சிவகங்கை நகர் கழக செயலாளர் மற்றும் நகர் மன்றத் தலைவர் திரு துரை ஆனந்த் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார, பேரூர் ஊராட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து ஜீன் 12 ஆம் தேதி குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமான இன்று சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி சிதம்பரம் அவர்கள் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று தனது கையெழுத்தையும் பலகையில் பதிவு செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad