காரைக்குடி பிரமிடு ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் 'நீட்' தேர்வில் சாதனை. 20 பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர வாய்ப்பு.
மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். 'நீட்' தேர்வுக்கு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறது 'காரைக்குடி பிரமிடு ஐ.ஏ.எஸ். அகாடமி' நிறுவனம்.
அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 'காரைக்குடி பிரமிடு ஐ.ஏ.எஸ். அகாடமி'யில் கடந்த ஓராண்டாக 'நீட்' தேர்வை எப்படி எதிர்கொள்வது? என சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் 5-ம் தேதி நடந்த 'நீட்' தேர்வு முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியானது.
அதில் 'காரைக்குடி பிரமிடு ஐ.ஏ.எஸ். அகாடமி'யில் பயின்ற 78 பேர் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட கட் ஆப் மார்க்குகளை விட அதிக மார்க்குகள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இவர்களில் 20 பேர் அரசு பள்ளிகளில் படித்து மருத்துவராகும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக 15 மாணவர்கள் தமிழக அரசின் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மூலமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவ கல்லூரியில் சேர அதிக வாய்ப்புகள் உள்ளது.
சிவகங்கை மாவட்டம் பீர்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிப்பை முடித்த சாக்கோட்டை அருகே உள்ள கமலை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி உடையப்பன் என்பவரின் மகன் ரவி 'நீட்' தேர்வில் 720 க்கு 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
காரைக்குடி எஸ்.எம்.எஸ்.அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர். மோகனப்பிரியா 'நீட்' தேர்வில் 720க்கு 602 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மேலும் சிவகங்கை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி டி.காயத்ரி 567 மார்க்கும், ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சிவராஜா 535 மார்க்கும், மற்றொரு மாணவியான மு ஹரி நந்தா 515 மார்க்கும், சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர். தனுஷா 497 மார்க்கும் எடுத்து வெற்றி சாதனை படைத்துள்ளனர்.
இந்த ஆண்டும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயின்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்படும் ஓராண்டு 'நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் 99521 60010 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, 'காரைக்குடி பிரமிடு ஐ.ஏ.எஸ். அகாடமி'யின் இயக்குனர் பேராசிரியர் சி.எஸ். கற்பகம் தெரிவித்துள்ளார். மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment