துபாயில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதக்கம் வென்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள்.
இந்தியன் யோகாசனா, விளையாட்டு கூட்டமைப்புச் சார்பாக துபாயில் மே மாதம் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில் பல நாடுகள் கலந்து கொண்டன. இந்தியன் யோகாசனா விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பங்குப்பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து சிவகங்கையில் நடைபெற்ற விளையாட்டுப் பயிற்சி முகாமில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மாணவர்கள் பெற்றனர். வெற்றி பெற்ற இம்மாணவர்கள் 'சாய்மகிழ் யோகா மையத்தில்' பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிவகங்கை மாவட்ட செயலாளரும் யோகா ஆசிரியருமான திரு பூ. புவனேஷ் அவர்கள் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு தன் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment