காரைக்குடியில் மின் விநியோகப்பணிகள் மந்தமாக நடக்கிறது. அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் சிரமப்படுகிறார்கள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் தொழில் வணிக கழகம் கோரிக்கை மனு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் மின்வாரிய அலுவலகத்தில் மாவட்ட மேற்பார்வைப் பொறியாளர் வீரமணி தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர்கள், உதவிப்பொறியாளர்கள் பங்கேற்றனர்.,
கூட்டத்தில் தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிட மணி, செயலாளர் எஸ். கண்ணப்பன் ஆகியோர் பேசினார்கள் பின்னர் கோரிக்கை மனு ஒன்றை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வீரமணியிடம் சாமி திராவிட மணி வழங்கினார்.
அதில் "காரைக்குடி நகரில் வ.உ.சி.சாலை, முத்துப்பட்டணம், மேல ஊரணி வாய்க்கால் தெரு, டி.டி. நகர், 100 அடி சாலை, கண்டனூர் சாலை, ரயில்வே பீடர் சாலை, ஆனந்தா நகர், இடையர் தெரு, மகரம் நோன்பு திடல், நியூ டவுன், ஜவகர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு, பகல் என எந்த நேரமும் மின்தடை ஏற்படுகிறது. முன்னறிவிப்பு இல்லாமல் ஏற்படும் மின்தடையால் மக்கள் அல்லல்பட்டு, தவிக்கின்றனர்.
நகர் முழுவதும் சில சிமெண்ட் கான்கிரீட் மின்கம்பங்கள் விரிசலுடனும், மின்கம்பங்களின் உள்ளே இருக்கும் இரும்பு கம்பியில் வெளியே தெரிவதையும் பார்க்கிறோம். அந்த மின்கம்பங்கள் கீழே விழும் அபாயத்தில் இருக்கிறது. எனவே இந்த மின்கம்பங்களை மாற்றிவிட்டு, புதிய மின்கம்பங்கள் நட வேண்டும்.
மொத்தத்தில் நகர் முழுவதும் மின்விநியோக பராமரிப்பு பணி மந்தமாக இருப்பது தெரிய வருகிறது. காரைக்குடி நகரில் முன் அறிவிப்பு இல்லாத மின்தடையை நீக்கி, தமிழக அரசு அறிவித்து வரும் மின்மிகு மாநிலத்தில் காரைக்குடி நகரையும் காண விரும்புகிறோம். இந்த குறைபாடுகளை ஆய்வு செய்து தவிர்த்திட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்" என கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் துணைத் தலைவர்கள் ஜி.டி.எஸ். சத்திய மூர்த்தி, இணைச் செயலர்கள் எஸ்.சையது, நிர்வாகக்குழு உறுப்பினர் நாகநாதன், மேலாளர் அழகப்பன், உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment