சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி தேரோட்டத்தை விமர்சையாக நடத்தியமைக்காக முதல்வரை நேரில் சந்தித்து தங்களது நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்ட நாட்டார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை இன்று (24. 06.2024) தலைமைச் செயலகத்தில் சிவகங்கை மாவட்டம் அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் திருவிழாவினை முன்னிட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு (21.6.2024) அன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றதையொட்டி உஞ்சனை நாட்டை சேர்ந்த ராமசாமி, வெள்ளைச்சாமி,அருணாச்சலம், கண்டதேவி ஊராட்சி சேர்ந்த முருகன்,கேசவமணி, செம்பொன் மாரியைச் சேர்ந்த ராமசாமி, முரசொலி, கணேசன் தென்நிலை நாடு ராஜ்குமார்,எழவன் கோட்டையைச் சேர்ந்த செந்தில்நாதன், முடியரசன், வீரகுமார், கண்ணன் கோட்டையைச் சேர்ந்த கணேஷ் குமார், இரவுசேரி நாட்டைச் சேர்ந்த பாலமுருகன், ரகுநாதன், கார்த்திகேயன்,கதிர், செந்தூர், செல்வம், வெள்ளை யானை அறக்கட்டளை நிர்வாகி அறிவு கனல் மற்றும் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் குருக்கள் தாஸ் ஆகியோர் தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர் இந்நிகழ்வின் பொழுது மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment