காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி புதுவயல் வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியின் சார்பாக சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடைபெற்றது. காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் துவங்கிய இப்பேரணியை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, சிவகங்கை உதவி ஆணையர் ஆயம் ரங்கநாதன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால் துரை, தேவகோட்டை கோட்ட ஆய அலுவலர் கந்தசாமி, காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோர் துவங்கி வைத்தனர். இப்பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, போதை ஒழிப்பின் அவசியத்தை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதமாக முழக்கமிட்டும் பிரசுரங்களை விநியோகித்தும் பங்கேற்றனர். கண்ணதாசன் மணி மண்டபத்தில் துவங்கிய இப்பேரணி கம்பன் மணிமண்டபத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணிக்கான ஏற்பாடுகளை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் போதை ஒழிப்பு விழிப்புணர்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் சுந்தரி, முனைவர் தெய்வமணி, முனைவர் செந்தில்குமார், முனைவர் லட்சுமண குமார் மற்றும் வித்யா கிரி கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் சேது கல்பனா மற்றும் கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கலா, கஸ்தூரி, ஈஸ்வரி, ஜெயபாரதி ஆகியோர் செய்து இருந்தனர். மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment