மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி சார்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அஞ்சல் வழி சேமிப்பு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலுள்ள பாபா மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு மானாமதுரை அஞ்சல் அலுவலகத்தின் மூலம் சேமிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடந்த சனிக்கிழமை அன்று பள்ளியில் காலை 9 மணி முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அஞ்சல் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு சேமிப்பின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் எடுத்துக்கூறி புதிய அஞ்சல் வங்கி கணக்கு தொடங்கப்பெற்று கணக்கு புத்தகத்தை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்வில் ஏராளமான பெற்றோர்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர். முதன்முதலில் அஞ்சல் தலையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி சேமிப்பு கணக்கு தொடங்க வைத்ததில் பாபா மெட்ரிக் பள்ளி பெருமை கொள்வதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பாபா மெட்ரிக் பள்ளியின் நிறுவனர் அம்மா பி. ராஜேஸ்வரி தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் மற்றும் பள்ளியின் ஆட்சியர் திருமதி ஆர். மீனாட்சி முன்னிலை வகித்தனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா மேற்கொண்டார்.
No comments:
Post a Comment