மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் 'மக்கள் ஆலோசனை கூட்டத்தில்' பங்கேற்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தெரு ராஜா அவர்களின் தலைமையில் அனைத்து மக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் பேருந்துகளில் மானாமதுரை பயணிகளை ஏற்ற மறுக்கும் விவகாரம் குறித்து கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி மானாமதுரை நிர்வாகிகள் மக்களோடு கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர். இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாம் தமிழர் கட்சி மானாமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நகர தலைவர் முருகேசன், மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் செல்வ கண்ணன், கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணன், மேற்கு நகர தலைவர் மாதவன், கிழக்கு ஒன்றிய பொருளாளர் அன்பரசன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி யுகேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment