சிவகங்கை மாவட்டத்தில் 2023-24 கல்வியாண்டின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிறந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கிய அமைச்சர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில், மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் 2023-24 ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற மாணவர்களுக்கு வழிகாட்டியாக சிறப்பாக செயலாற்றிய பள்ளி தலைமையாசிரியர்கள், பாட ஆசிரியர்கள் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்களை பாராட்டி கேடயங்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment