மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார் ப. சிதம்பரம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காந்தி சிலை வளாகத்தில் உள்ள நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாண்புமிகு முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு ப. சிதம்பரம் அவர்களின் தலைமையில் திங்கட்கிழமை மாலை வட்டார நகர அளவிளான கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய் காந்தி, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் திரு ஏ. ஆர். பி. முருகேசன் மற்றும் நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் 5வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் திரு எஸ். பி. புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் பெற தீவிர மற்றும் சிறப்பாக தேர்தல் களப்பணியாற்றிய கட்சி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டியினர் ஆகியோர்களை ஊக்குவித்து, தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பால்நல்லதுரை, முன்னாள் வட்டார தலைவர் முல்லை ஏ. சின்னசாமி, மேற்கு வட்டார தலைவர் பாண்டிவேல், நகர் காங்கிரஸ் கமிட்டி கே. வி. பொம்மராஜ், மாங்குளம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பாலுச்சாமி, வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாவட்ட மற்றும் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment