மானாமதுரை கல்குறிச்சி அரசு ஆரம்ப பள்ளியில் "எண்ணும் எழுத்தும்" நிகழ்வினை தொடங்கி வைத்து சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்குறிச்சி அரசு ஆரம்ப பள்ளியில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி திறப்பு முதல் நாளான ஜூன் 10ஆம் தேதி திங்கட்கிழமை அன்று அரசின் விலையில்லா பாடநூல்களை முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் குழந்தை செல்வங்களுக்கு வழங்கி "எண்ணும் எழுத்தும்" நிகழ்வினை தொடங்கி வைத்து, வருங்கால சாதனையாளர்களாக வளர வேண்டும் என பள்ளி மாணவர்களை வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட புனித ஜோசப் நர்சரி மற்றும் ப்ரைமரி பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு ஆதார் பதிவு மையத்தினையும் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நகர் கழக செயலாளர் திரு க. பொன்னுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர்மன்ற தலைவர் திரு மாரியப்பன் கென்னடி, வட்டார கல்வி அலுவலர் திரு பால்ராஜ், வட்டார கல்வி அலுவலர் திருமதி அமிஸ்தா பானு, தலைமையாசிரியர் திருமதி சாந்தி, ஜோசப் பள்ளி தலைமையாசிரியர் திருமதி ஜீவிதா மாரி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி லதா அண்ணாதுரை, ஒன்றிய துணை பெருந்தலைவர் திரு முத்துச்சாமி, கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு துரை. ராஜாமணி, மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் திரு அண்ணாதுரை, திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு எம். கடம்பசாமி, ஒன்றிய கவுன்சிலர் திருமதி ராதா சிவசந்திரன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி வளர்மதி, 6வது வார்டு செயலாளர் சிவாஜி, 15வது வார்டு செயலாளர் முருகேசன், ஆசிரிய பெருமக்கள், குழந்தைச் செல்வங்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment