சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த மாணவர் அந்தமானில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
அந்தமானில் முதல் முதலாக நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மலேசியா, சிங்கப்பூர்,ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் இருந்து ஆண்கள் பெண்கள் என ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்., தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான சிலம்பம் போட்டியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த நியூ உதயம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பி.ஆர்.பி. செல்வம் பிரபா தம்பதிகளின் மகன் ஹரிஷ் தமிழ்நாடு ஓவரால் சாம்பியன்ஷிப் சிலம்பம் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று எஸ் பி கே எஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமி சார்பில் சர்வதேச சிலம்பம் போட்டியில் பங்கேற்று தொடர்ந்து சிறப்பாக விளையாடி தான் பிறந்த தேவகோட்டை மண்ணிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்., வெற்றி பெற்று தங்க பதக்கத்துடன் வந்த ஹரிஷ்சுக்கு தேவகோட்டை சுற்று வட்டார பகுதி அரசியல் பிரமுகர்களும் விளையாட்டுத் துறை சார்ந்த அதிகாரிகளும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment