மானாமதுரையை அடுத்த சங்கமங்கலம் கிராமத்தில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயத்தை கைவிடும் கிராம பொதுமக்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கிழப்பசலை ஊராட்சி சங்கமங்கலம் கிராமத்தில் சுமார் கடந்த 13 ஆண்டு காலமாக பெருமளவில் விவசாயம் சரிவர நடைபெறவில்லை. இதற்கு காரணமாக கிராம பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பின்வருமாறு, " எங்கள் கிராமத்தில் விவசாயம் மேற்கொள்ள தேவையான நீர் வரும் வழித்தடமான மடை, சட்ரஸ், கால்வாய், கலுங்கு என அனைத்து நீர்பிடிப்பு ஆதாரங்களுக்கும் தேவையான கட்டமைப்புகள் சரிவர எந்த ஒரு பராமரிப்பும் இன்றி தற்போது இடிந்து கிடக்கும் சூழ்நிலையில், தேவையான உபரி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வழிவகை ஏதுமின்றி விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் நீர் வரும் வழித்தடங்கள் அனைத்திலும் புல், புதர், கருவேல மரம் ஆகியவற்றின் வேர்கள் அடர்த்தியாக ஆழமாக ஊன்றி நீர் வரத்தை தடை செய்து மடை, கால்வாய், கலுங்கு ஆகியவற்றை மிகக் கடுமையாக சேதமடைய செய்துள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக கிராம பொதுமக்கள் சார்பாக பல அரசு அதிகாரிகளிடம் நேரில் பல முறை மனு கொடுத்தும் பெயரளவில் கூட எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கிராம பொதுமக்களின் உணவு தேவை, வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள மறுத்து, தங்களை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த அரசு அதிகாரிகளுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தையும் முன்னெடுக்க இருப்பதாகவும் பகிரங்கமாக கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டினர்". எனவே மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கிராம பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ள கிராம பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment