சென்னையில் டி.நகரில் நடைபெற்ற சிகரம் நட்சத்திர விருது 2024ல் நட்சத்திர விருது பெற்ற மானாமதுரையை சேர்ந்த இளைஞர் தமிழ்செல்வன்.
சென்னை தியாகராய நகரில் உள்ள சர். பிட்டி. தியாகராயர் கலையரங்கத்தில் 'சிகரம் விருதுகள் 2024' விருது வழங்கும் விழா மே மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த தமிழ் இலக்கிய ஆசிரியரான திரு கே. தமிழ்செல்வன் என்ற இளைஞருக்கு அவர் வழங்கி வரும் கல்வி சேவைகளின் அடிப்படையில் 'நட்சத்திர விருது' வழங்கப்பட்டது. இவ்விருதிணை தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குனருமான திரு கே. பாக்யராஜ் அவர்கள் வழங்க தமிழ்செல்வன் பெற்றுக் கொண்டார். இவ்விருதினை வழங்கிய நடிகர் பாக்கியராஜ் அவர்கள் தமிழ்செல்வனுக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மேலும் தமிழ்ச்செல்வன் தமிழ் மைந்தன் டிஎன்பிஎஸ்சி அகாடமி, டிராகன் ஸ்போர்ட்ஸ் கிளப், ஈவினிங் டியூஷன் சென்டர் போன்ற கல்வி சேவைகளை மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கி வந்துள்ளது தமிழ்செல்வனை இவ்வுயரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. மேலும் தமிழ்செல்வன் கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை நாரத காண சபை அரங்கத்தில் நடைபெற்ற 'அறம் விருதுகள் 2024ல்' கலந்து கொண்டு நட்சத்திர விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக விருதுகளை பெற்று மானாமதுரை நகருக்கு பெருமைகளை சேர்த்துள்ள தமிழ்செல்வனை குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment