மானாமதுரை ஸ்ரீ வெங்கடேஷா இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வி பயிலும் மாணவி ஓவிய போட்டியில் முதல் பரிசு வென்றார்.
"மூன்றாம் தலைமுறை" நடத்திய மாநில அளவிலான ஓவிய போட்டியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியான ஸ்ரீ வெங்கடேஷா இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வி பயிலும் மாணவி ஏ. சாய் அக்ஷிதா சிவகங்கை மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்று தான், பயிலும் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு முதல் பரிசுக்கான வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழை பள்ளியின் தாளாளர் திரு ராஜ்குமார் அவர்கள் பள்ளி வளாகத்தில் வழங்கி தன் சார்பாகவும் பள்ளி நிர்வாகிகத்தின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கௌரவித்தார். வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment