மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது, மாணவர்கள் யோகாசனம் செய்து அசத்தல். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 21 June 2024

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது, மாணவர்கள் யோகாசனம் செய்து அசத்தல்.

 


மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது, மாணவர்கள் யோகாசனம் செய்து அசத்தல்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் ஜூன் மாதம் 21ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் யோகாவின் சிறப்பு அம்சங்கள் பற்றியும், யோகாவின் பயன்பாடுகள் பற்றியும் மாணவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள். மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், யோகா ஆசனங்களான சூரிய நமஸ்காரம், சுகாசனம்,  உச்சட்ராசனம், பத்மாசனம், பருவதாசனம், சசங்காசனம், உட்கட்டாசனம், தானாசனம், வீரபத்ராசனம், ஏகபாதாசனம், திரிகோணாசனம், சக்ராசனம், சர்வங்காசனம், ஏகபாதசிரசாசனம், ஹலாசனம் போன்ற ஆசனங்களை மாணவர்கள் செய்து காட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்விழாவிற்கு பாபா மெட்ரிக் பள்ளியின் நிறுவனர் அம்மா பி. ராஜேஸ்வரி அவர்கள் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் மற்றும் பள்ளியின் நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா மேற்கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad