சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 21 June 2024

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.


 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.



சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்து யோகா செய்வதன் நன்மைகளை பற்றி விளக்கிக் கூறினார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் சுந்தரி வரவேற்புரை ஆற்றினார். இயற்பியல் துறை இணைப் பேராசிரியரும், கல்லூரியின் யோகா பயிற்சியாளருமான முனைவர் சுப்பு மாணவ மாணவிகளுக்கு சர்வதேச யோகா தினம் பற்றி எடுத்துக் கூறி மாணவர்களுக்கு யோகா செய்வதால் ஏற்படும் பலன்களைக் கூறி பல்வேறு யோகாசனங்கள் செய்து காண்பித்து சிறப்புரையாற்றினார்.  அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவ மாணவிகளும் யோகாசனம் செய்தனர். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் முனைவர் செந்தில்குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் தெய்வமணி, முனைவர் லட்சுமண குமார், முனைவர் செந்தில்குமார், முனைவர் சுந்தரி ஆகியோர் செய்திருந்தனர். தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் துரை மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்களும், மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad