தேவகோட்டையை அடுத்த கண்டதேவி கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திற்கு உட்பட்ட கண்டதேவி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் 17 வருடங்களுக்கு பின்னர் இந்த ஆண்டு குரோதி வருடம் ஆனி மாதம் 7ஆம் தேதி பௌர்ணமி நாளான வெள்ளிக்கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் ஆகியோர் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். இத்தேரோட்ட நிகழ்ச்சியில் தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்த கோடி பெருமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கோவில் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்து விழாவை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment