ராமநாதபுரத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கள்ள சாராய விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ராமநாதபுரத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 55க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் எம். ஏ. முனியசாமி அவர்களின் தலைமையில் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் அ. அன்வர் ராஜா, மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்தையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன், மாணவரணி துணைச் செயலாளர் செந்தில்குமார், விருதுநகர் மண்டல செயலாளர் சரவணகுமார், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநில, மண்டல, மாவட்ட,, ஒன்றிய, நகர், பேரூராட்சி கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிமுக கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment