கார்த்திக் ப. சிதம்பரம் அவர்களின் வெற்றியை கொண்டாடும் விதமாக மானாமதுரை நகர் கமிட்டி சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய கட்சி நிர்வாகிகள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் முறையாக சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினராக வெற்றி பெற்ற மாண்புமிகு திரு கார்த்திக் ப. சிதம்பரம் அவர்களின் வெற்றி விழாவை கொண்டாடும் விதமாக, மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நகர் மன்ற உறுப்பினர் திரு எஸ். பி. புருஷோத்தமன் அவர்களின் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், பட்டாசு வெடித்து, பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு இனிப்புகள் வழங்கி வெகு சிறப்பாக வெற்றி விழாவை கொண்டாடினர். இந்நிகழ்வில் நகர, வட்டார, பேரூர், ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
No comments:
Post a Comment