மானாமதுரை அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் மகா பிரதோஷம் வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் ஆலயத்தில் குரோதி வருடம் வைகாசி மாதம் 22 ஆம் தேதி திரயோதசி திதி செவ்வாய்க்கிழமை அன்று மகா பிரதோஷ வழிபாட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் மற்றும் சோமநாதர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் ஆகியவை வெகு சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெற்றது. இந்நிகழ்வில் தீப்பந்தத்தை கையில் ஏந்தியவாறும், எக்காளங்கள் முழங்க மானாமதுரை நகர் பகுதிகளில் உள்ள பக்தகோடி பெருமக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்கள் விரதமிருந்து திரளாக கலந்து கொண்டு அம்மனின் அருள் ஆசி பெற்றனர்.
No comments:
Post a Comment