சிவகங்கை பாராளுமன்ற தொகுதி 2024 தேர்தலில் வெற்றி பெற்ற திரு கார்த்திக் ப. சிதம்பரம் அவர்களுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் வாழ்த்து.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதி 2024 தேர்தல் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு கார்த்திக் பா. சிதம்பரம் அவர்கள் இரண்டாவது முறையாக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் அவர்களுக்கு மாண்புமிகு முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் திரு ப. சிதம்பரம், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு ரகுபதி, மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் ஆகியோர் வெற்றிச் சான்றிதழ் பெற்றுக் கொண்ட கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் மாங்குடி, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய் காந்தி, மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் அவர்கள் வெற்றி பெற்ற இந்திய கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு கார்த்திக் ப. சிதம்பரம் அவர்களுக்கு அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, வட்டார, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment