தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கைகளை சமர்ப்பிக்கும் அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் மானிய கோரிக்கை நடைபெறும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையினை சமர்ப்பிக்கும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் தன் சார்பாகவும், தொகுதி பொதுமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். தொடர்ச்சியாக கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையினை சமர்ப்பிக்கும் மாண்புமிகு கூட்டுறவுதுறை அமைச்சர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களையும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
No comments:
Post a Comment