மானாமதுரையை அடுத்த மாங்குளத்தில் ரூபாய் 2.7 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழிற்பேட்டை, முதல்வருக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்.
நடப்பு ஆண்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் அவர்களின் மானிய கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் பொருட்டு மானாமதுரை வட்டம் மாங்குளத்தில் 10 ஏக்கரில் சுமார் 300 நபர்களுக்குமேல் வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூபாய் 2.70 கோடி திட்ட மதிப்பீட்டில் தமிழ்நாடு சிட்கோ மூலம் புதிய தொழிற்பேட்டை அமைப்பதற்கு உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். எனவே தொழிற்பேட்டை அமைப்பதற்கு உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு தா. மோ. அன்பரசன் அவர்களுக்கும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் தன் சார்பாகவும், தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment