கள்ளக்குறிச்சி விச சாராய உயிரிழப்பிற்கு திமுக அரசை கண்டித்து போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக ராமநாதபுரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவுறுத்தலை அடுத்து ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் எம். ஏ. முனியசாமி அவர்களின் தலைமையில் சனிக்கிழமையன்று தமிழக முதல்வர் அவர்களின் நிர்வாக திறமையின்மையின் காரணமாக கள்ளக்குறிச்சி விச சாராய உயிரிழப்பிற்கு தார்மீக பொறுப்பேற்கவும், திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து போராட்டம் முன்னெடுப்பது தொடர்பாக மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர பேரூர் ஊராட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment