மானாமதுரை பச்சேரி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் வீர விதை மற்றும் விளையாட்டு தற்காப்பு கலைகளின் பயிற்சி அறக்கட்டளையினர் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் பச்சேரி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவை முன்னிட்டு மானாமதுரையில் இயங்கி வரும் வீரவிதை மற்றும் விளையாட்டு தற்காப்புக் கலைகளின் பயிற்சி அறக்கட்டளையின் சார்பாக அறக்கட்டளையின் தலைவர் கலைவளர்மணி மாஸ்டர் திரு கே. பெருமாள் அவர்கள் கிராம பொது மக்களின் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினரால் அறக்கட்டளையின் சார்பாக கலந்து கொண்ட தலைவர் பெருமாள் மற்றும் அறக்கட்டளையில் தற்காப்பு பயிற்சி பெற்று வரும் மாணவர் மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விழா குழுவினர், பச்சேரியை சேர்ந்த உள்ளூர் கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்த கோடி கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment