மயிலிறகில் முத்தமிழறிஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்களின் உருவ படத்தை வரைந்து கட்சி நிர்வாகிகளிடம் வழங்கிய மானாமதுரையை சேர்ந்த ஓவியர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மானாமதுரை இன்னார் தெருவை சேர்ந்த ஓவியர் திரு கார்த்திக் அவர்கள் டாக்டர் மு. கருணாநிதி அவர்களின் உற்சாகமாக கொண்டாடும் வகையில், தனது கை வண்ணத்தில் மயிலிறகில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உருவப்படத்தை தீட்டி கட்சி நிர்வாகிகளிடம் அன்பளிப்பாக வழங்கினார். தத்ரூபமாக வரையப்பட்ட இப்படத்தை கண்டு மெய் சிலிர்த்த கட்சி நிர்வாகிகள் ஓவியர் கார்த்திக் அவர்களின் அபார திறமையை வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment