மானாமதுரையை அடுத்த ஏனாதி செங்கோட்டை செல்லும் பிரதான தார் சாலை மிக மோசமாக உள்ளதாக பொதுமக்கள் வேதனை, நடவடிக்கை எடுக்குமா மாவட்ட உள்ளாட்சி நிர்வாகம்?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட ஏனாதி செங்கோட்டை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதான மாநில நெடுஞ்சாலை மராமத்து பணிகளின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக கிராம பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கிராம பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், இவ்வழியாக செல்லும் கர்ப்பிணி பெண்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் அபாயகரமான பயணத்தை மேற்கொள்வதால் எச்சரிக்கையாக பயணிக்க வேண்டும் என்ற அச்சத்துடனும், பெரும் சிரமத்திற்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி வருகின்றனர். மேலும் செங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கு செல்லும் சுற்று வட்டார பகுதி கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் இச்சாலை கல், மண் மற்றும் குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்லும் பயணிகள் கல் தடுக்கி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழும் சம்பவங்கள் தற்போது அதிகமாகி வருகிறது என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கனத்த நெஞ்சத்துடன் தங்களின் புகாரை பதிவு செய்தனர். எனவே கர்ப்பிணிகள் குழந்தைகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வாகம் தலையிட்டு இச்சாலையை சீர் செய்திட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்..
No comments:
Post a Comment