காரைக்குடி ஈதுகா மைதானத்தில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்.
இஸ்லாமியர்களின் பண்டிகைகளுள் ஒன்றான பக்ரீத் திருநாளை அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள் வெகு சிறப்பாக கொண்டாடி வரும் இவ்வினிய நாளில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஈதுகா மைதானத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து தங்கள் சார்பாகவும், தொகுதி பொதுமக்கள் சார்பாகவும் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வரும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment