கீழடியில் மற்றும் கொந்தகையில் பத்தாம் கட்ட அகலாய்வு பணிகளை காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்த தமிழக முதல்வர்.
தமிழ்நாடு அரசு சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை மற்றும் தொல்லியல் துறை சார்பாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடி மற்றும் கொந்தகை ஆகிய இடங்களில் பத்தாம் கட்ட அகழாய்வு பணிகளை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இதில் மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்திக் ப. சிதம்பரம், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப ஆகியோர் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் காந்தி, திராவிட முன்னேற்ற கழக கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment