மாண்புமிகு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு மானாமதுரை சிப்காட் மைதானத்தில் மாபெரும் கிரிக்கெட் திருவிழா நடைபெற்றது.
மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் மு கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக மானாமதுரை ஒன்றிய மற்றும் நகர திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் எம்.என்.எம்.சி.சி கிரிக்கெட் கிளப் மற்றும் நண்பர்கள் ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் கிரிக்கெட் திருவிழா மே மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை மானாமதுரை சிப்காட் வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் கலந்து கொண்டு கிரிக்கெட் திருவிழாவினை துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் சிறப்பு பரிசாக நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி அவர்களால் ரூபாய் 20,101 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பரிசு 15,101 ரூபாயை ஏ. ஆர். ஜெயமூர்த்தி, இரண்டாம் பரிசு 13,101 ரூபாயை எம்.என்.எம்.சி.சி கிரிக்கெட் கிளப், மூன்றாம் பரிசு 9,101 ரூபாய் ஆர் சிவகுமார், நான்காம் பரிசு 6,101 ரூபாயை சி. காளியப்பன் மற்றும் சிறப்பு பரிசாக 5,001 ரூபாயை எஸ். ரவிச்சந்திரன் ஆகியோரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இக்கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 17 அணிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நகர கழக செயலாளர் பொன்னுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி, மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய துணை பெருந்தலைவர் முத்துசாமி, திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி வேங்கை சுந்தர், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வளர்மதி, எம்.என்.எம்.சி.சி கிரிக்கெட் கிளப் குழுவினர், கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment