மானாமதுரை நீதிமன்ற வளாகத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கான விடுதி ஆகியவற்றை ஜூன் மாதம் 20ஆம் தேதி வியாழக்கிழமை மாலை சுமார் 6.30 மணி அளவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் மாண்புமிகு திரு ஆர். மகாதேவன் அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் மாண்புமிகு நீதியரசர் ஆர். சுரேஷ்குமார், மாண்புமிகு நீதியரசர் திரு பி. டி. ஆதிகேசவலு, மாண்புமிகு நீதியரசர் திரு பி. வடமலை, மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ஆகியோர் தலைமை வகித்து சிறப்பு பேருரை ஆற்றினர். இவ்விழா தொடக்கத்தில் மாண்புமிகு நீதிபதி சுவர்ணம் ஜே. நடராஜன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகரக் கழகச் செயலாளர் க. பொன்னுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி, சிவகங்கை மாவட்ட பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் திரு வி. சுகுமாரன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆசா அஜித் இ.ஆ.ப, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் இ.கா.ப, மானாமதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு கே. பாலமுருகன் மற்றும் மானாமதுரை வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு ஏ. கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாண்புமிகு நீதிபதி திரு பசும்பொன் சண்முகையா அவர்கள் நன்றி உரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் மானாமதுரை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், மூத்த & இளம் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment