மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய கட்சியினர்.
ஜீன் 19ஆம் தேதி 54வது பிறந்தநாள் விழா காணும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய் காந்தி மற்றும் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நகர் மன்ற உறுப்பினர் திரு எஸ். பி. புருஷோத்தமன் ஆகியோரின் தலைமையில், மானாமதுரை நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் கடை வியாபாரிகள், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடினர். இந்நிகழ்வில் நகர, வட்டார, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment