சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் கை சின்னத்திற்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்த வாக்காளர் பெருமக்களுக்கு இந்தியா கூட்டணி சார்பாக நன்றி தெரிவித்தனர்.
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து மாண்புமிகு பாராளுமன்ற உருப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம், மாண்புமிகு முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் ஆகியோர் இணைந்து மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புவனம், லாடனேந்தல், கலியாந்தூர், பூவந்தி, மேலநெட்டூர், ஆலம்பச்சேரி, இராஜகம்பீரம், முத்தனேந்தல், இண்டங்குளம், கண்ணமங்களம், கருஞ்சுத்தி, அரியாண்டிபுரம் கீழநெட்டூர் ஆகிய பகுதிகளில் இந்தியா கூட்டணியின் கை சின்னத்திற்கு வாக்குகளித்து மாபெரும் வெற்றியை அளித்த வாக்காளர் பெருமக்களை நேரில் சந்தித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் சேங்கைமாறன், மானாமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, மானாமதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன், மானாமதுரை ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாத்துரை, ஒன்றிய துணை பெருந்தலைவர் முத்துசாமி, இராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜீப்ரகுமான், இளையான்குடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சுப. மதியரசன், இளையான்குடி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார, பேரூர், ஊராட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment