காரைக்குடியில் ஹவாலா பணம் ஆறு லட்சம் காவல்துறை வாகன சோதனையில் சிக்கியது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டிஎஸ்பி பிரகாஷ் அறிவுறுத்தலின் பேரில் ஹவாலா பண பரிமாற்றம் குறித்த தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது., இந்த வாகன சோதனையில் காரைக்குடி வழி கண்டனூர் சாலையில் சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த தமிழரசன் என்ற நபரை காவல்துறையினர் சோதனை இட்டதில் எந்தவித ஆவணமும் இல்லாமல் ரூபாய் 6 லட்சத்தை 500 ரூபாய் பண கட்டுகளாக கொண்டு வந்ததை சந்தேகத்தின் அடிப்படையில் காரைக்குடி அழகப்பபுரம் காவல் நிலையம் அழைத்து வந்த காவல்துறையினர் கிடக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் தமிழரசனின் நண்பர் சிங்கப்பூரில் இருப்பதாகவும் அவர் இந்த ஆறு லட்சத்தை அவர் குறிப்பிட்ட சிலரது வங்கி கணக்கில் செலுத்தச் சொன்னதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.,இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்தப் பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காரைக்குடி டி எஸ் பி பிரகாஷ் கூறுகையில் இதுபோன்று ஆவணங்கள் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக ஹவாலா பணம் கை மாறுவதை வழிப்பறி செய்ய ரவுடிகள் அடங்கிய கும்பல் திட்டமிட்டு வட்டம் போடுவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் இதுபோன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதமாக கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment