காரைக்குடியில் பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை செல்லவிருக்கும் முகவர்களுக்கான கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அபூர்வா மஹாலில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை வருகிற ஜீன் 4 ஆம் தேதியன்று நடைபெற்ற இருக்கின்ற நிலையில் இந்தியா கூட்டணி சார்பாக சிவகங்கை பாரளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல இருக்கும் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த முகவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழக தலைமைக்கழகம் சார்பாக ஜுன் ஒன்றாம் தேதி சனிக்கிழமையன்று காணொளி காட்சி வாயிலாக தலைமை கழக கூட்டம் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆர். பெரியகருப்பன் மற்றும் மாண்புமிகு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய்காந்தி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த முகவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு வாக்குகள் எண்ணப்படும் விதிமுறைகள் பற்றிய பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment