சிவகங்கை நகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணைந்து நடத்தும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சர்க்கரை டெஸ்ட், ரத்த டெஸ்ட் மற்றும் தடுப்பூசி ஆகிய பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இதில் சிவகங்கை நகர் மன்றத் தலைவர் நகர் கழகச் செயலாளர் சி. எம். துரை ஆனந்த் அவர்கள் தானும் பரிசோதனை செய்து கொண்டார். இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ராமதாஸ், சண்முகராஜன், கீதா, கார்த்திகேயன், பாண்டியராஜன் மற்றும் துப்புரவு தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுக்கான மருத்துவ பரிசோதனைகளையும் பெற்றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment