ஓய்வு பெறும் நாளிலேயே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர்.
மே 30ஆம் தேதி காவல்துறையிலிருந்து ஓய்வு பெறும் நிலையில் திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல்துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய திரு வெள்ளதுரை அவர்கள் மே 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் 2013 ஆம் ஆண்டு விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விவகாரத்தில், அச்சம்பவம் நடந்த காலகட்டத்தின்போது மானாமதுரை காவல்துறை துணை கண்காணிப்பாளராக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அரியக்கூடிய திரு வெள்ளத்துரை அவர்களின் மீது விசாரணை நடவடிக்கை எடுக்கும் விதமாக அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தமிழ்நாடு காவல்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment