திருப்புவனம் காஞ்சிரங்குளம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் நாடக கலைஞர்களை ஊக்குவித்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் காஞ்சிரங்குளம் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கிராம பொதுமக்களின் சிறப்பு அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் கலந்து கொண்டு முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட நாடக கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட கழகத் துணைச் செயலாளரும் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு சேங்கைமாறன், ஒன்றிய கவுன்சிலர் திரு சுப்பையா, டி. ஆர். சேகர், மடப்புரம் மகேந்திரன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா செய்தியாளர் டிசோன்
No comments:
Post a Comment