மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கமங்கலம் கிராமத்தில் அபாயகரமான நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கமங்கலம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சங்கமங்கலம் கிராம பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை போக்கும் வகையில், இக்கிராமத்திற்கு அடுத்துள்ள கீழப்பசலை கிராமத்திலிருந்து ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய்கள் மூலம் நீரை சங்கமங்கலத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சேமித்து, பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இக்குறிப்பிட்ட நீர் தேக்க தொட்டியானது கட்டப்பட்டு சுமார் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், தற்போது இதன் தூண்கள் சிதலமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவுக்கு மிகவும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால் காரணத்தால் எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய நிலையில் இக்குடிநீர் தொட்டி தற்போது உள்ளதால், நீர்தேக்க தொட்டி அருகில் வசித்துவரும் குடும்பத்தினர் தினந்தோறும் மிகுந்த அச்சம் மற்றும் பயவுணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக இந்நீர்தேக்க தொட்டியை சீரமைத்து ஒழுங்குபடுத்தி தருமாறு பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித பயனும் இல்லையென இக்கிராம பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் விரைந்து தலையிட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் எற்படாத வகையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை புதிதாக அமைத்துதர வேண்டும் என கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா செய்தியாளர் டிசோன்
No comments:
Post a Comment