மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 'ஒரு நாள் மதிய உணவு சேவையகம்' நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மே 28ஆம் தேதி 'உலக பட்டினி தினத்தை' முன்னிட்டு, பசி என்னும் பிணி போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்திட தமிழக வெற்றி கழக தலைவர் தளபதியார் திரு விஜய் அவர்களின் உத்தரவின் பெயரில் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பில் "ஒரு நாள் மதிய உணவு சேவையகம்" எனும் அன்னதான விழா தமிழக வெற்றி கழக சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு முத்து பாரதி அவர்களின் தலைமையிலும், மாவட்டம் செயலாளர் திரு காளீஸ்வரன், ஒன்றிய தலைவர் சரண்ராஜ், ஒன்றிய துணை தலைவர் எஸ். கண்ணன், மகளிர் அணி செல்வி, ஒன்றிய நிர்வாகிகள் தீனதயாளன், மாயக்கண்ணன் பிரீத்திவி, ராஜேஷ் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழக மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment