திருப்பாச்சேத்தி அருகே 4 மாதங்களே ஆன ஆண் பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த வழக்கில் தாய் தந்தை உட்பட மூன்று பேர் கைது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே பிறந்து நான்கு மாதங்களே நிரம்பிய ஆண் பச்சிளம் குழந்தையை கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் அக்குழந்தையின் தாய் தந்தை உட்பட மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வந்த இவ்வழக்கு விசாரணையில் போலீசார் மேற்கொண்ட தீவிர கள ஆய்வுகளின் விசாரணை மூலமாக போதுமான ஆதாரங்களை திரட்டி, இவ்வழக்கின் இறுதி ஆய்வறிக்கையை சமர்ப்பித்ததின் பின்னர் பச்சிளம் குழந்தையை தாய் மற்றும் தந்தை தான் கொன்று புதைத்தனர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி உறுதி செய்து அவர்களை கைது செய்துள்ளனர். இத்தம்பதிகளுக்கு உடந்தையாக உடன் இருந்து செயல்பட்டு வந்த மேலும் ஒரு பெண்ணையும் போலீஸார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment