சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம், நடவடிக்கை எடுக்குமா மாவட்ட,மருத்துவ நிர்வாகம்? - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 27 May 2024

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம், நடவடிக்கை எடுக்குமா மாவட்ட,மருத்துவ நிர்வாகம்?

 


சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம், நடவடிக்கை எடுக்குமா மாவட்ட,மருத்துவ நிர்வாகம்?


சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திங்கட்கிழமை பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். வார விடுமுறை வழங்கிடவும், தூய்மை பணிகள் செய்திட போதிய உபகரணங்கள் வழங்கவும், ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்க கோரியும், பணியாளர்களுக்கென உடைமாற்று அறை மற்றும் உணவு உண்ணும் அறை உள்ளிட்டவற்றை வழங்க கோரியும் துப்புரவு, தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



தனியார் மருத்துவமனைகளில் கூட இல்லாத அளவிற்கு போதிய அடிப்படை உரிமைகள் மற்றும் வசதிகளின்றி ஒரு அரசு மருத்துவமனை செயல்பட்டுவருவது தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் என்றும் குற்றம் சாட்டினார். பலமுறை மருத்துவ நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் செவி சாய்க்காததால் போராட்டம் ஒன்றே தீர்வு என்ற முடிவில் பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பணியாளர்களின் இப்போராட்டம் காரணமாக மருத்துவமனையானது பணியாளர்களின்றி ஸ்தம்பித்து, மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மருத்துவமனையின் புற மற்றும் உள் நோயாளிகளுக்கு போதிய அளவு மருத்துவ உபகரணங்கள் இல்லாததாலும், இருக்கின்ற உபகரணங்கள் சரிவர வேலை செய்யாமல் உபயோகத்தில் இல்லாததாலும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடுமையான அவதிக்குள்ளாவது வாடிக்கையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad