அழகப்பா அரசுக் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு மே 30 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளதாக முதல்வர் பெத்தாலெட்சுமி அறிவிப்பு.
அழகப்பா அரசு கலைக் கல்லூரி, காரைக்குடி செய்திக்குறிப்பு:
காரைக்குடி , அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2024-2025ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு 30.05.2024அன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் கல்லூரியின் உமையாள் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. 30.05.2024 அன்று காலை 9.30 மணியளவில் விளையாட்டு, முன்னாள் இராணுவத்தினர், NCC மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து 10.06.2024 திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல்(பி.சி.ஏ), மற்றும் பி.எஸ்.சி.புவி அமைப்பியல் பாடப்பிரிவுகளுக்கும் 11.06.2024 செவ்வாய் கிழமை அன்று காலை 9.30 மணியளவில் வணிகவியல்(பி.காம்.), தொழில் நிர்வாகவியல்(பி.பி.ஏ.) பாடப்பிரிவுகளுக்கும் , 12.06.2024 புதன்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு மற்றும் பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும் முதல் கட்ட பொதுக்கலந்தாய்வு நடைபெறும். இக் கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ மாணவிகள் பெற்றோருடன் தங்களின் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சிறப்புப் பிரிவினராக இருப்பின் அதற்குரிய அனைத்துச்சான்றிதழ்கள் ஆகியவற்றின் அசல் மற்றும் இரண்டு நகல்கள், நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும், கல்லூரிக்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவத்தின் அனைத்து பக்கங்களையும் உள்ளடக்கிய நகல்கள் இரண்டும் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டச் செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment